மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 மா 2022

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம்!

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மக்களவையில் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார்.

137 நாட்களுக்குப் பிறகு கடந்த இரு நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது. தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 102.16 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 92.19 ரூபாய்க்கும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, 967.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு எரிபொருள் விலை உயர்ந்து வருவதைக் கண்டித்து, மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மக்களவையில் இன்று (மார்ச் 24) எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கமளித்தார்.

ஏப்ரல் 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலகட்டத்தை ஒப்பிடும்போது சர்வதேசச் சந்தையில், எல்.என்.ஜி எனப்படும் இயற்கை திரவ எரிவாயு விலை 37 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

விலை உயர்வுக்கு, கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து உலகின் ஒரு பகுதியில் நடத்தப்படும் ராணுவ நடவடிக்கை தான் காரணம். உலக அளவில் 37 சதவிகிதத்துக்கும் அதிகமாக விலை உயர்ந்தாலும் இந்தியாவில் 5 சதவிகிதம் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றைய சர்வதேச நிலைமை என்ன என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சவுதி நிலவரப்படி எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2022 வரை 285 சதவீதம் உயர்ந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்தியாவில் மக்களுக்கு மிகவும் குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்கச்செய்ய வேண்டும் என்பதே அரசின் முயற்சியாக இருக்கிறது' என்றும் குறிப்பிட்டார்.

-பிரியா

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

வியாழன் 24 மா 2022