மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 மா 2022

ஹிஜாப் விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம்: உச்ச நீதிமன்றம்!

ஹிஜாப் விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம்: உச்ச நீதிமன்றம்!

ஹிஜாப் விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை செல்லும். இது நியாயமான கட்டுப்பாடுதான் என்று கடந்த மார்ச் 15ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் காரணமாக மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வருகின்றனர். இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதேசமயம் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து ஹோலி பண்டிகைக்கு பின்பு பரிசீலிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில் இன்று(மார்ச் 24) காலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு, மாணவிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேவ்தத் காமத், ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக ஏற்றுக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

“கர்நாடக மாநிலத்தில் மாணவிகளுக்கு மார்ச் 28ஆம் தேதி தேர்வுகள் தொடங்கவுள்ளதால், ஹிஜாப் வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று வழக்கறிஞர் தேவதத் காமத் கோரிக்கை விடுத்தார்.

“இதற்கும் தேர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால், இந்த பிரச்சனையை பரபரப்பாக்க வேண்டாம்” தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.

“இதனால் மாணவிகளுக்கு ஒரு வருடம் வீணாகி போய்விடும். அதனால், இந்த வழக்கை அடுத்த வாரத்தில் விசாரிப்பதற்கு ஒரு தேதியை நிர்ணயிக்கலாம்” என்று வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு எந்த பதிலும் அளிக்காத தலைமை நீதிபதி, அடுத்த வழக்கு குறித்து முறையிடலாம் என்றுக் கூறி மறுப்பு தெரிவித்துவிட்டார்.

-வினிதா

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

வியாழன் 24 மா 2022