மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 மா 2022

கொரோனா கட்டுப்பாடுகள் தேவையில்லை: மத்திய அரசு!

கொரோனா கட்டுப்பாடுகள் தேவையில்லை: மத்திய அரசு!

நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மார்ச் 31ஆம் தேதியுடன் முடித்துக் கொள்ளலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததையடுத்து, 2020 மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கின் காரணமாக நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். பலர் தங்களின் வேலையை இழந்து வாழ்வாதாரத்துக்காக தவிர்த்தனர். அதற்கேற்றாற்போல் கொரோனா தொற்றும் வேகமாக பரவி லட்சக்கணக்கில் மக்களை கொன்று குவித்தது. கொரோனா வைரஸ் தொடர்ந்து பல்வேறு உருமாற்றங்களை அடைந்து முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என்று தொடர்ச்சியாக மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை வெகுவாக குறைந்துள்ளது. அதனால், பரவலுக்கேற்றவாறு அந்தந்த மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததையடுத்து மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறை உத்தரவுகளை வெளியிட்டது.

கடந்த 24 மாதங்களில் நோய் கண்டறிதல், கண்காணிப்பு, தொடர்புத் தடமறிதல், சிகிச்சை, தடுப்பூசி போன்ற பல்வேறு அம்சங்களில் தொற்றுநோய் மேலாண்மைக்கான குறிப்பிடத்தக்க திறன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் சொந்த திறன்களையும், அமைப்புகளையும் உருவாக்கி, தொற்றுநோயை நிர்வகிப்பதற்கான விரிவான குறிப்பிட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளன. கடந்த ஏழு வாரங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கையும் சரிந்து வருகின்றன.

இந்த நிலையில், பிப்ரவரி 25ஆம் தேதிக்கு முன்பாக பிறப்பிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடு உத்தரவுகள் மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கு பிறகு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படாது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் விதித்துள்ள கொரோனா கட்டுபாட்டு விதிகளை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளை மார்ச் 31ஆம் தேதியுடன் மாநில அரசுகள் நீக்கிக் கொள்ளலாம்.

இருப்பினும், மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். எந்த ஒரு பகுதியிலாவது நோய் தொற்று விகிதம் அதிகரித்தால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி பிரந்திய அளவில் உடனடி மற்றும் தேவையான நடவடிக்கையில் மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். நோய் தொற்றின் அபாயத்தை மதிப்பிட்ட பிறகு சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மாநில அரசுகள் திறந்துவிட அறிவுறுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்றுவரை 1,81,89,15,234 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

புதன் 23 மா 2022