மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 மா 2022

ஓபிஎஸ் உண்மையைச் சொல்லியிருக்கிறார்: சசிகலா

ஓபிஎஸ் உண்மையைச் சொல்லியிருக்கிறார்: சசிகலா

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கடந்த இரு நாட்களாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆஜராகி வாக்குமூலம் அளித்த நிலையில் அவர் உண்மையைத் தான் சொல்லியிருக்கிறார் என சசிகலா கூறியுள்ளார்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேற்று ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்தார். அவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது, சசிகலா மீது இன்று வரை எனக்கு மரியாதை உண்டு. அவர் சதித்திட்டம் எதுவும் செய்யவில்லை” என்று கூறியிருந்தார்.

விசாரணை முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஒபிஎஸ், “ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணையிலும், குறுக்கு விசாரணையிலும் எனக்குத் தெரிந்த, உரிய பதிலைத் தெரிவித்திருக்கிறேன். 2018ல் முதல் எனக்கு 7 முறை சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் ஆஜராகவில்லை.

நான் முரண்பாடாகப் பதில் அளிக்கவில்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எக்மோ கருவி எடுப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக போய் பார்த்தேன். அதற்கு முன்னதாக 74 நாட்கள் நான் அவரை பார்க்கவில்லை. இது உண்மை.

பொதுமக்களுக்கு ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்றுதான் முதன் முதலில் நான் பேட்டி கொடுத்தேன். இந்த சந்தேகத்தை போக்குவதற்குச் சின்னம்மாவுக்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொண்டு நிரூபித்தால், அவர் மேல் இருக்கும் குற்றச்சாட்டு நீக்கப்படும் என்ற கருத்தையும் நான் சொல்லியிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை நான் தெரிந்த கேள்விக்குப் பதில் அளித்திருக்கிறேன். தெரியாத கேள்விக்குத் தெரியாது என்று கூறினேன். ஆணையத்தின் விசாரணை எனக்கு திருப்தியாக இருக்கிறது. எனக்கு தனிப்பட்ட முறையில் சின்னம்மா மீது மதிப்பும் மரியாதையும் உண்டு” என தெரிவித்தார்.

ஓபிஎஸின் வாக்குமூலம், சின்னம்மா என குறிப்பிட்டு அவர் பேசியது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தி.நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, “என் மீதும் மதிப்பு இருக்கிறது என ஓபிஎஸ் உண்மையை சொல்லியிருக்கிறார். ஆணையம் ஆரம்பித்த போது கூட, உண்மை வெளிவர வேண்டும் என்றுதான் நான் நினைத்தேன். அதற்கு இன்று முடிவு வந்துள்ளது. என் மீது சந்தேகம் இருப்பதாக மக்கள் சொன்னதாக நான் எடுத்துக்கொள்ளவில்லை. அரசியலில் என்னை பிடிக்காதவர்கள் சொன்னதாகத்தான் எடுத்துக்கொண்டேன்.

இதுவரை கடவுளுக்குத் தெரிந்த உண்மை, ஓபிஎஸ் மூலம் நேற்று மக்களும் தெரிந்திருக்கிறது. உண்மையை யாராலும் மாற்றவும் முடியாது, திரையிட்டு மறைக்கவும் முடியாது. அதிமுகவிலிருந்து எந்த சமிக்ஞைகளும் வரவில்லை என்பதால் எனக்கு எந்த் வருத்தமும் இல்லை” என்றார்.

-பிரியா

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

புதன் 23 மா 2022