மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 மா 2022

துரை வைகோவுக்கு பொறுப்பு: பொதுக்குழுவில் ஒப்புதல்!

துரை வைகோவுக்கு பொறுப்பு: பொதுக்குழுவில் ஒப்புதல்!

வைகோ மகன் துரை வைகோ மதிமுக தலைமை கழக செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதற்குப் பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை அண்ணா நகரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று 28ஆவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 6.3.2019க்கு பிறகு இன்று மதிமுக பொதுக்குழு கூடியது. மதிமுக துணைப் பொதுச் செயலாளர்கள், தலைமை கழக செயலாளர் உள்ளிட்ட 4 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

முன்னதாக, தலைமை கழக செயலாளர் பதவிக்கு வைகோவின் மகன் துரை வைகோ அறிவிக்கப்பட்டிருந்தார். இதற்கு, சிவகங்கை மாவட்ட செயலாளர் சிவந்தியப்பன், விருதுநகர் செயலாளர் சண்முகசுந்தரம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வில்லை. அதோடு திமுகவில் மதிமுகவை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

திமுகவிலிருந்து மதிமுக பிரிந்தபோது, அன்றைய திமுக தலைவர் கலைஞர் குடும்ப அரசியல் செய்வதாகச் சொல்லித்தான் வைகோ வெளியே வந்தார். ஆனால் இன்று தன்னுடைய மகன் துரை வைகோவை கட்சிக்குள் கொண்டுவந்துள்ளார் என எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று நடந்த பொதுக்குழுவிலும், இந்த மூன்று அதிருப்தி மாவட்டச் செயலாளர்களும் கலந்துகொள்ளவில்லை.

அதுபோன்று, தலைமைக் கழக செயலாளர் பொறுப்புக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால் துரை வைகோ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துரை வைகோ தேர்வு குறித்து மதிமுக பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மதிமுக கழகத்தின் சட்ட திட்ட விதி எண் 29, பிரிவு21 ன்படி தேர்வு செய்யப்பட்டுள்ள, கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் தி.மு.இராஜேந்திரன், ஆடுதுறை இரா.முருகன், தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, தணிக்கைக்குழு உறுப்பினர் தி.சுப்பையா ஆகியோரை கழகப் பொதுக்குழு பாராட்டி வாழ்த்துகின்றது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய தீர்மானமாக, கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பேசக்கூடிய நபர்கள், கட்சியின் நடவடிக்கைகளை விமர்சித்து பொதுவெளியில் பேசுபவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு முழு அதிகாரம் அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்மூலம் அதிருப்தி மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

-பிரியா

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

புதன் 23 மா 2022