மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 மா 2022

பள்ளி, கல்லூரிகள் மதத்தைக் கடைப்பிடிக்கும் இடமல்ல: கர்நாடக அமைச்சர்!

பள்ளி, கல்லூரிகள் மதத்தைக் கடைப்பிடிக்கும் இடமல்ல: கர்நாடக அமைச்சர்!

பள்ளி, கல்லூரிகள் மதத்தைக் கடைப்பிடிக்கும் இடமல்ல என்று கர்நாடகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் மீது விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று அம்மாநில உயர் நீதிமன்றத் தீர்ப்பு தமிழ்நாடு உள்பட பல்வேறு இடங்களில் வலிமையான போராட்டத்துக்கு வழிவகுத்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஹிஜாப் தீர்ப்பை எதிர்த்து மாணவர்களும், இஸ்லாமிய அமைப்பினரும் போராடி வருகின்றனர்.

மற்றொரு பக்கம் கர்நாடகாவில் பல்வேறு மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து வருகின்றனர். “ஹிஜாப் அணிவது எங்களின் அடிப்படை உரிமை. இதை கல்லூரி அதிகாரிகள் தடுக்கக் கூடாது” என்று பள்ளி வளாகத்தின் வாசலில் நின்று போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹிஜாப் காரணமாக செய்முறைத் தேர்வுகளை புறக்கணித்த மாணவிகளுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்று பள்ளிக்கல்வித் துறை உறுதியாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பி.சி.நாகேஷ், “பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மதத்தைக் கடைப்பிடிப்பதற்கான இடம் அல்ல. 1985ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்படும் மாணவர்களுக்கான சீருடை தொடர்பான விதிகளை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “சில பள்ளிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகள் படிக்கின்றனர். அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சில மாணவர்களே போராட்டம் நடத்துகின்றனர். பள்ளி, கல்லூரிகள் மத மையங்களாக மாறக் கூடாது. மற்ற மாணவர்களும் இதே போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம் என்பதால் வகுப்பறையில் ஹிஜாப் அணிவது ஒழுக்கமின்மைக்கு சமம்” என்று கூறினார்.

மாணவர்களிடையே ஒற்றுமையை உறுதி செய்வதற்கும் மத அடையாளங்களை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் மற்றும் கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டாலும், இது தங்களின் உரிமைகளை மீறுவதாகவும், உருது மொழியில் பேச அனுமதிக்கப்படாததால் தாங்கள் இதேபோன்ற பாகுபாட்டை எதிர்கொண்டதாகவும் மாணவர்கள் கூறி வருகின்றனர்.

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

செவ்வாய் 22 மா 2022