மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 மா 2022

நெடுஞ்சாலை திட்டங்களுக்கு முதல்வர் ஒத்துழைப்பார்: திருமா

நெடுஞ்சாலை திட்டங்களுக்கு முதல்வர் ஒத்துழைப்பார்: திருமா

தமிழகத்தில் கைவிடப்பட்டுள்ள நெடுஞ்சாலை திட்டங்களை மத்திய அரசு மீண்டும் தொடங்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மக்களவையில் எம்.பி தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களவையில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நேற்று (மார்ச் 21) நடைபெற்றது. இதில், சிதம்பரம் எம்.பி தொல். திருமாவளவன் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

அப்போது பேசிய அவர், “ஒரு தேசத்தின் வளர்ச்சியில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் நெடுஞ்சாலை வசதிகளை மேம்படுத்துவது, சாலை போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது என்பது மிகவும் இன்றிமையாதது. அகில இந்தியளவில் இந்தப் பணிகள் இன்றைக்குக் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. ஓப்பிட்டளவில் தென்னிந்தியாவில் இந்தப் பணிகளின் வேகம் குறைவாக இருக்கிறது என்ற குறைப்பாடு உள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையின் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் கைவிடப்பட்டிருக்கின்றன என்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

கன்னியாகுமரி - கேரளா செல்லும் நான்கு வழிச்சாலை, சென்னை ஸ்ரீபெரும்புதூர் - வாலாஜா செல்லும் ஆறு வழிச்சாலை, விக்கிரவாண்டி - சோழப்புரம் செல்லும் நான்கு வழிச்சாலை ஆகிய தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலை பணிகள் கைவிடப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. இதற்கு காரணம், தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு இல்லாததே காரணம் என மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதை மறுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்தத் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும்” என உறுதியளித்துள்ளார். எனவே, கைவிடப்பட்ட அத்தகைய திட்டங்களை மீண்டும் தொடங்கி நடைமுறைப்படுத்த வேண்டும்" என விசிக சார்பில் கோரிக்கை வைக்கிறேன்.

தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள் 2008 என்ற சட்டத்தின்படி இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையே குறைந்தது 60 கிலோமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதுபோல, மாநகராட்சி, நகராட்சி எல்லைகளைச் சுற்றி 10 கிலோமீட்டருக்கு எங்கும் சுங்கச்சாவடி இருக்கக் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த விதிமுறைகளுக்கு மாறாக தமிழகத்தில் பல சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. அவற்றை எல்லாம் மூடுவதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

-வினிதா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

செவ்வாய் 22 மா 2022