பத்மஸ்ரீ விருது பெற்ற முத்துகண்ணம்மாள், ஏ.கே.சி.நடராஜன்

politics

2022ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளைத் தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் பெற்றனர்.
இதில் சதிர் நடனத்தின் கடைசி மூச்சான தமிழகத்தைச் சேர்ந்த முத்துகண்ணம்மாளும், கிளாரினெட் எவரெஸ்ட் ஏ.கே.சி.நடராஜனும் பத்மஸ்ரீ விருதைப் பெற்றுக்கொண்டனர்.
கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்களுக்கு பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும்.
டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் நேற்று நடந்த பத்ம விருது வழங்கும் விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த சதிர் நடனக் கலைஞர் முத்துகண்ணம்மாளும் கலந்துகொண்டு குடியரசுத் தலைவர் கையால் பத்மஸ்ரீ விருது பெற்றார். தன்னோடு சதிர் நடனக் கலை முடிந்துவிடாமல் அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்ல முயன்று வரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துகண்ணம்மாள் விருது பெற்று தமிழகத்துக்கும், சதிராட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அதுபோன்று, திருச்சியைச் சேர்ந்த 93 வயதான கிளாரினெட் எவரெஸ்ட் ஏ.கே.சி.நடராஜனும் பத்மஸ்ரீ விருது பெற்றார். 93 வயதிலும் இன்றளவும் அவர் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறார். இளமை குறையாத அவரது வாசிப்புக்குக் கிடைத்த மகுடம்தான் இந்த பத்மஸ்ரீ விருது.
இவர்களைப் பற்றி நமது மின்னம்பலத்தில் [‘கிளாரினெட் எவரெஸ்ட்’ ஏ.கே.சி. நடராஜன் பிறந்தநாள்!](https://minnambalam.com/entertainment/2020/05/30/63/clarinet-everest-a-k-c-natarajan-s-90th-birthday-special) என்ற தலைப்பிலும், [சதிர் சிறக்கிறது, சதிர் கலைஞர்கள் தேய்கிறார்கள்!](https://minnambalam.com/public/2018/03/21/23) என்ற தலைப்பிலும் சிறப்புக் கட்டுரை வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *