மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 மா 2022

ஆன்லைன் சூதாட்டம்: ஈபிஎஸுக்கு அமைச்சர் பதில்!

ஆன்லைன் சூதாட்டம்: ஈபிஎஸுக்கு அமைச்சர் பதில்!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று சிறப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் ஆன்லைன் நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இந்த சட்டத்தைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.

இதைத்தொடர்ந்து பலரும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்ட நிகழ்வும் தமிழகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு எதிராகக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது அவர் பேசுகையில், ”நீதிமன்றம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான அவசரச் சட்டத்தை ரத்து செய்தபோது சட்டத்துறை அமைச்சர், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். ஆனால் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

100 நாட்களுக்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதன் மூலம் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மூத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரகுபதி, :ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிமுக ஆட்சியில் அவசரமாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் எதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது என்ற குறிப்புகள் முறையாக இல்லாததால் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

அதிமுக அரசு கொண்டு வந்த சட்டத்தை நிலை நிறுத்தவே உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம். திமுக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களைக் காப்பாற்றும் பணியைச் செய்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்” என்று பதிலளித்தார்.

-பிரியா

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

செவ்வாய் 22 மா 2022