மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 21 மா 2022

தக்காளி விவசாயிகளுக்கு இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்!

தக்காளி விவசாயிகளுக்கு இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்!

சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் தக்காளியின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது. கிலோ 100 ரூபாயைத் தாண்டியும் விற்பனையானது. ஆனால் அதன் விலை தற்போது கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

சந்தைகளிலும், ஆட்டோக்களிலும் விற்பனை செய்யப்படும் தக்காளி கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால் இதை விடக் குறைவாகவும், உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் விற்பனையாளர்கள் வாங்குகின்றனர். இதனால், தக்காளியைச் சந்தைக்கு எடுத்து வருவதற்கு ஆகும் பெட்ரோல் போடுவதற்குக் கூட விற்பனையாவதில்லை என விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “விலை வீழ்ச்சியால் தக்காளி வயல்களிலிருந்து பறிக்கப்படாமல் அழுகிவருவதால் குளிர் கிடங்குகள் அமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

“தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் தான் மிக அதிக பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. தக்காளி விலை வீழ்ச்சியடைவதையும், உயர்வதையும் தடுக்க இந்த மாவட்டங்களில் குளிர்பதனக் கிடங்குகளை அமைக்க வேண்டும்; தக்காளியிலிருந்து சாஸ் உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பதற்கான சிறப்பு மண்டலங்களை அமைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம், சிறப்பு மண்டலங்களையும், குளிர்பதன கிடங்குகளையும் அமைக்கும் திட்டம் ஆகியவற்றை தமிழக அரசு விரைந்து செயல்படுத்துவதற்கான அறிவிப்பை வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் பதிலுரையில் அறிவிக்க வேண்டும். தக்காளி விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

திங்கள் 21 மா 2022