மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 21 மா 2022

பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷன்: கண்கலங்கிய மகள்கள்!

பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷன்:  கண்கலங்கிய மகள்கள்!

ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த முப்படைகளின் கூட்டுத் தலைவர் பிபின் ராவத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்த பத்ம விபூஷன் விருதை அவரது மகள்கள் பெற்றுக்கொண்டனர்.

இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன. கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வணிகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கெளரவிக்க இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

குடியரசு தினத்தன்று 2022ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இதில் 4 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் உள்ளன. விருது பட்டியலில் 34 பேர் பெண்கள் மற்றும் 13 பேர் மரணத்திற்குப் பின் விருது பெறுபவர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று(மார்ச் 21) டெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் முதற்கட்டமாக 2 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 54 பத்மஸ்ரீ விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இதில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்த பத்ம விபூஷன் விருதை அவரின் மகள்களான கிருத்திகா மற்றும் தாரிணி குடியரசு தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டனர். அப்போது அரங்கமே உருக்கமாக அவர்கள் கண்கலங்கினர்.

மூத்த காங்கிரஸ் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் பத்ம பூஷன் விருதை பெற்றுக் கொண்டார்.

மேலும், டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், கோவிஷீல்ட் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனவல்லா, பஞ்சாபி நாட்டுப்புற பாடகர் குர்மீத் பாவா (மரணத்திற்குப் பின்), பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா உள்ளிட்டோர் குடியரசு தலைவரின் கையால் பத்ம பூஷன் விருதை பெற்றுக் கொண்டனர்.

தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், சதிராட்ட கலைஞர் முத்துக் கண்ணம்மாள், கிளாரினெட் கலைஞர் ஏ.கே.சி நடராஜன், ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா, பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் மகளிர் பிரிவில் தங்கம் வென்ற அவனி லெகாரா ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

மற்ற விருதுகள் வரும் 28ஆம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.

-வினிதா

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

திங்கள் 21 மா 2022