மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 மா 2022

தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் ராஜினாமா?

தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் ராஜினாமா?

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக (அட்வகேட் ஜெனரல்) தற்போது பதவி வகிக்கும் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகின்றன.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவரான மு.க‌‌. ஸ்டாலின், 2021 மே 7ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார். அடுத்த இரு நாட்களில் மே 9 ஆம் தேதி தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமனம் செய்யப்பட்டார்.

1977-ம் ஆண்டில் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்துகொண்ட சண்முகசுந்தரம் மிக நீண்ட நெடிய அனுபவத்தை இத்துறையில் பெற்றவர். ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக பதவி வகித்த சண்முகசுந்தரம் சிபிஐ வழக்கறிஞராகவும் ரயில்வே வழக்கறிஞராகவும் பணியாற்றி உள்ளார்.

கடந்த 10 மாதங்களாக தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய சண்முகசுந்தரம், தனது சொந்த காரணங்களின் அடிப்படையில் அட்வகேட் ஜெனரல் பதவியிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

சண்முக சுந்தரத்துக்கு பதிலாக அட்வகேட் ஜெனரல் பதவிக்கு திமுகவின் மூத்த வழக்கறிஞரான விடுதலை நியமனம் செய்யப்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேந்தன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

ஞாயிறு 20 மா 2022