மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 மா 2022

தனியார் வேலைவாய்ப்பு: பணி ஆணை வழங்கிய முதல்வர்!

தனியார் வேலைவாய்ப்பு: பணி ஆணை வழங்கிய முதல்வர்!

வண்டலூர் அருகே இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடந்து வரும் நிலையில் அதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவிகள், பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் போட்டியில் தேர்வானவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பணி ஆணை வழங்கினார்.

வண்டலூர் அருகே பிஎஸ் அப்தூர் ரஹ்மான் கிரசண்ட் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரி உள்ளது. இங்கு இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து பட்டதாரிகளுக்குத் தனியார் துறையில் வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாமை இன்று நடத்திவருகிறது.

இந்த முகாமில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஐடி நிறுவனங்கள் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், கண்ணாடித் தொழிற்சாலைகள், ஆட்டோ மொபைல்ஸ், கட்டுமான நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள் என 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் நிரப்பப்பட உள்ளது.

இதற்காக கல்லூரி வளாகத்தில் தனித்தனியாக ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதையொட்டி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வருகை தந்து இன்டர்வியூவில் கலந்து கொண்டுள்ளனர்.

8ஆம் வகுப்பு முதல், ஐடிஐ டிப்ளமோ, நர்சிங் பார்மசி, பொறியியல் என அந்தந்த கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலைக்கு ஆட்களை நிறுவனங்கள் தேர்வு செய்து வருகின்றன.

இங்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று காலை முகாமுக்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்குப் பணி நியமன ஆணையை வழங்கினார்.

முதல்வருடன் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி.கணேசன் ஆகியோரும் இருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அரசுப்பணி போட்டி தேர்வுகளுக்குப் பயிற்சி வகுப்புகளைக் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வதையும் அங்கிருந்தபடியே முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

-பிரியா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

ஞாயிறு 20 மா 2022