மாணவிகளுக்காவது ரூ.1000 கொடுப்பீர்களா: அண்ணாமலை


இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தொலைநோக்குப் பார்வை எதுவும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இன்று 107 பக்கங்கள் கொண்ட நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளையும், விமர்சனங்களையும் முன் வைத்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்,
“இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ‘இன்றும்’ நிறைவேற்றவில்லை. தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’ அமைந்திருக்கிறது.
6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி பயிலும் போது ரூ. 1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். ஆனால் இது 'பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்’ செயல்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
-பிரியா