மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 மா 2022

போரை நிறுத்த முடியாது: ரஷ்யா

போரை நிறுத்த முடியாது:  ரஷ்யா

உக்ரைனில் போரை நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ரஷ்யா நிராகரித்தது.

உக்ரைன் நாட்டில் ரஷ்யா 22ஆவது நாளாக இன்று தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் 25 லட்சத்திற்கும் அதிகமான உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வந்த நிலையில் உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தை நாடியது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த உத்தரவிடக்கோரி நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று இன்டர்நேஷனல் கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸ் எனப்படும் ஐநாவின் தலைமை நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சர்வதேச நீதிமன்றத்தின் முன்னவர் நீதிபதி ஜோன் டோனோக், "ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது படையெடுத்துள்ளதை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்த விசாரணையின் போது இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி ரஷ்யாவின் செயல்களைக் கண்டித்து அந்நாட்டிற்கு எதிராக வாக்களித்தார்.

அதுபோன்று 13 நீதிபதிகள் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இரண்டு பேர் எதிராக வாக்களித்தனர்.

இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ரஷ்யா தாக்குதலை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் போர் தொடுத்தது. உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் தஞ்சமடைந்திருந்த நிலையில் அந்த திரையரங்கு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் கூறியுள்ளது.

இந்தச்சூழலில், சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ரஷ்யா நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ கூறுகையில், “சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவைக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. இந்த தீர்ப்பை அமல்படுத்த ரஷ்யாவும் உக்ரைனும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், ரஷ்யாவால் இந்த உத்தரவுக்குச் சம்மதம் தெரிவிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

-பிரியா

பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் 41% மாநிலங்களின் பங்கு: ப.சிதம்பரம் ...

3 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் 41% மாநிலங்களின் பங்கு: ப.சிதம்பரம்

முள்ளிவாய்க்கால்: பெசன்ட் நகர் கடற்கரை நினைவேந்தலுக்கு திமுக ...

12 நிமிட வாசிப்பு

முள்ளிவாய்க்கால்: பெசன்ட் நகர் கடற்கரை நினைவேந்தலுக்கு திமுக அரசு தடை!

72 மணி நேரம்தான் கெடு: அண்ணாமலை எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

72 மணி நேரம்தான் கெடு:  அண்ணாமலை எச்சரிக்கை!

வியாழன் 17 மா 2022