மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 மா 2022

17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் 17 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து உள்துறைச் செயலாளர் கே.எஸ்.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

இன்று பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவில்:

1.மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய ஐஜி அஸ்ரா கார்க், தென் மண்டல ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. தென் மண்டல ஐஜி ஆக பதவி வகிக்கும் டி.எஸ். அன்பு இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை காவல் சட்டம் ஒழுங்கு வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. சென்னை சட்டம் ஒழுங்கு வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு மதுரை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. மதுரை காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா பணியிட மாற்றம் செய்யப்பட்டு வடக்கு மண்டல ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. சென்னை வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் துரைகுமார் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

7.சென்னை காவலர் நலன் ஐஜி மல்லிகா இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை விரிவாக்கப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. சென்னை காவலர் நலன் ஏஐஜி சம்பத்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு, பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை காவலர் நலன் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. மத்திய அரசு பணியில் இருந்து தமிழகம் திரும்பிய ஐஜி பால நாகதேவி சென்னை செயலாக்க பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி ஜெயராம் சென்னை ஆயுதப்படை கூடுதல் கமாண்டன்ட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

11. அயல்பணியில், புதுதில்லியில் தலைமையிட எல்லையோர காவல் படை பிரிவு ஐஜி ஆக பணியாற்றும் ஆயுஷ்மான் திவாரி ஏடிஜிபி ஆக பதவி உயர்வு பெற்று அதே பொறுப்பில் தொடர்கிறார்.

12. அயல்பணியில் ஜார்கண்டில் சிஆர்பிஎஃப் ஐஜி ஆக பதவி வகிக்கும் மகேஷ்வர் தயாள் ஏடிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு அதே பொறுப்பில் தொடர்கிறார்.

13. அயல் பணியில் டெல்லியில் இந்தோ எல்லைப் பாதுகாப்புப் பிரிவு ஐஜியாக பணியாற்றும் சுமித் சரண் ஏடிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு அதே பொறுப்பில் தொடர்கிறார்.

14. சென்னை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி அபின் தினேஷ் மோடக் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று அதே பொறுப்பில் தொடர்கிறார்.

15. சென்னை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி சஞ்சய் குமார் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று அதே பொறுப்பில் தொடர்கிறார்.

16. சமூக நலன் மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜி ஆக பதவி வகிக்கும் செந்தாமரைக்கண்ணன் ஏடிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு அதே பொறுப்பில் தொடர்கிறார்.

17. ஊர் காவல் படை ஐஜியாக பதவி வகிக்கும் வனிதா ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று சென்னை ரயில்வே கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

-வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வியாழன் 17 மா 2022