மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 மா 2022

எந்த துறையாக இருந்தாலும் முதல்வனாக திகழ வேண்டும்: அமைச்சர் பொன்முடி

எந்த துறையாக இருந்தாலும் முதல்வனாக திகழ வேண்டும்: அமைச்சர் பொன்முடி

எந்த துறை எடுத்தாலும், அதில் மாணவர்கள் முதல்வனாக திகழ வேண்டும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றுவது தொடர்பாக பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள், தொழில் நிறுவன பிரதிநிதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், முன்னாள் மாணவர்கள் என 90 பேர் கொண்ட குழுவை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

இவர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு இன்று(மார்ச் 17) அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி,

“அண்ணா பல்கலையின் துணைவேந்தர் 25 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு இன்றைக்குதான் கூட்டத்தை கூட்டியுள்ளனர். உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படும். மாணவர்கள் படிக்கும்போதே, வேலைவாய்ப்புக்கான பயிற்சியையும் பெற வேண்டும். எந்த துறையாக இருந்தாலும், அதில் முதல்வனாக திகழ வேண்டும் என்னும் எண்ணத்தை பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே உருவாக்க வேண்டும்.

இதுநாள்வரை இருந்த பாடத்திட்டம், படிப்பறிவை மட்டுமே நோக்கியிருந்தது. படிப்பறிவு,நடைமுறை அறிவு, பகுத்தறிவு ஆகிய மூன்றும் சேர்ந்ததாக பாடத்திட்டம் அமைய வேண்டும்” என்று பேசினார்.

இதையடுத்து வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் கிடையாது எல்லா பொறியியல் கல்லூரிகளிலும் இந்த பயிற்சி அளிக்கிற திட்டத்தைக் கொண்டுவர வேண்டும். படிக்கும்போதே மாணவர்களுக்கு ஒரு ஆர்வத்தை உருவாக்கி அவர்களின் திறனைக் கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் பாடத்திட்டங்கள் அமைய வேண்டும். அதனால்தான் தொழில்முனைவோர்களையும், தொழிற்சாலை வைத்திருப்பவர்களையும் அழைத்துப் பேசி முடிவு செய்திருக்கிறோம்.

பொறியியல் அல்லது கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றுகிற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, மாணவர்களின் திறனை அறிந்து, அதற்கேற்ப அவர்களை வளர்த்து எடுக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் மட்டுமில்லை, பள்ளி மாணவர்களுக்குமே அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ, அதை அறிந்து கொண்டு அதில் அவர்களை வளர்த்து எடுக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் கொண்டு வந்த நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம். மாணவர்கள் படிக்கும்பொழுதே அவர்களின் திறனை வளர்த்து தொழிற்பயிற்சி வழங்கும் வகையில் அடுத்த கல்வியாண்டில் பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்படும்” என்று கூறினார்.

-வினிதா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வியாழன் 17 மா 2022