மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 மா 2022

கொஞ்சும்போதும் கோபம்-நேருவை கலாய்த்த ஸ்டாலின்

கொஞ்சும்போதும் கோபம்-நேருவை கலாய்த்த ஸ்டாலின்

திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் மறைந்த கே.என்.ராமஜெயம் அவர்களின் மகன் விநீத்நந்தன்–அக்‌ஷயா ஆகியோரின் திருமணம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினோடு வந்து தலைமை ஏற்றுத் திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த திருமண விழாவில், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். சென்னை மேயர் பிரியாவும் கலந்துகொண்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினர்.

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “திருச்சி என்றால் நேருதான். நேரு என்றால் திருச்சிதான். அதுபோன்று மாநாடு என்று சொன்னாலும் நேரு தான். திருப்புமுனை மாநாட்டைத் திருச்சியில் பலமுறை நடத்திக் காட்டி கலைஞர் உள்ளத்தில் சிறப்பிற்குரிய இடத்தை பிடித்தவர் நேரு.

மேடையில் இருக்கக் கூடிய மணமக்களையும், இங்கு வந்திருக்கக் கூடியவர்களையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தாலும், ராமஜெயம் இங்கு இல்லையே என்ற வருத்தம் நேருவுக்கும், அவரது குடும்பத்துக்கும் மட்டுமல்லாமல் எனக்கும் இருக்கிறது.

ஆனால் அந்த வருத்தத்தை எல்லாம் போக்கக் கூடிய வகையில், தனது தம்பி மகன் திருமணத்தைக் கழக மாநாடு போல் நடத்திக் கொண்டிருக்கிறார் நேரு. ராமஜெயத்தோடு நெருக்கமாக இருந்தவர்கள் அவரை எம்.டி. என்று தான் அழைப்பார்கள். எம்.டி என்றால் மேனேஜிங் டைரக்டர் அல்ல. அனைவரையும் வசப்படுத்தக் கூடிய மேக்னெட் டைரக்ரடாகவும் அவர் இருந்திருக்கிறார். நேருவின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர் ராமஜெயம்” என்று அவரை நினைவுகூர்ந்து பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நேரு இன்றுதான் அமைதியாக இருக்கக் கூடிய காட்சியைப் பார்க்கிறேன். எப்போதும் படபடப்பாகத் தான் இருப்பார். அங்கேயும், இங்கேயும் ஓடிக்கொண்டிருப்பார். நல்ல காரியமாக இருந்தாலும், கெட்ட காரியமாக இருந்தாலும் வேகமாகத்தான் பேசுவார். நமது செல்வேந்திரன் கூட அடிக்கடி சொல்லுவார். நேரு எப்போதுமே கோபமாகத்தான் இருப்பார். அவரது மனைவியைக் கொஞ்சும் போது கூட கோபமாகத்தான் கொஞ்சுவார் என்று சொல்லுவார்” என்று கலாய்த்துப் பேசினார் முதல்வர்.

-பிரியா

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

புதன் 16 மா 2022