மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 மா 2022

ஹிஜாப் மேல்முறையீடு: உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஹிஜாப் மேல்முறையீடு: உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஹிஜாப் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், ஹோலி விடுமுறைக்கு பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக் கோரி ஐந்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை நேற்று தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், ஹிஜாப் மீதான தடை தொடரும் என்று தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பு முஸ்லிம் மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த நிலையில், இன்று காலை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு, ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி முறையீடு செய்தார்.

“தேர்வுக்கு மாணவிகள் செல்ல வேண்டியுள்ளதால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என்று வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

“இதுகுறித்து மற்றவர்களும் குறிப்பிட்டுள்ளனர். பார்ப்போம்” என்றார் தலைமை நீதிபதி.

“தேர்வுகள் தொடங்குகிறது..அதனால்தான் இந்த அவசரம்” என்று மீண்டும் வழக்கறிஞர் கூறினார்.

இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, “எங்களுக்கு நேரம் கொடுங்கள். ஹோலி பண்டிகைக்கு பிறகு இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று கூறினார்.

அமைதியான சூழல்

ஹிஜாப் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்ட நிலையில், இன்று மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. பதற்றமான சூழ்நிலையை தவிர்க்க, பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று உடுப்பி மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு துணை ஆணையர் குர்மா ராவ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

செய்தியாளர்களை சந்தித்த துணை ஆணையர் குர்மா ராவ், “அனைத்து பள்ளிகளிலும் வகுப்புகள் அமைதியாக நடைபெறுகின்றன. நிலைமை இயல்பாக உள்ளது. மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மக்கள் அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அமைதியான மாவட்டமாக உடுப்பி திகழ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

புதன் 16 மா 2022