மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 மா 2022

சோனியா உத்தரவு: காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா!

சோனியா உத்தரவு: காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உத்தரவைத் தொடர்ந்து தோல்வியடைந்த மாநிலத் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் என 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சொல்லப்போனால் ஒரு சில இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெறும் ஆயிரக்கணக்கில் தான் வாக்குகளைப் பெற்றிருந்தனர்.

படுதோல்வி அடைந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், கடந்த மார்ச் 13ஆம் தேதி காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்யவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று (மார்ச் 15) பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களின் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார் சோனியா காந்தி.

இந்த உத்தரவைத் தொடர்ந்து நேற்றே கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர், உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து கணேஷ் கொடியால், உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லாலு, ஆகியோர் ராஜினாமா செய்தனர். இந்நிலையில், ஆட்சியை இழந்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது ராஜினாமா கடிதத்தை இன்று சோனியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று ஜி-23 எனப்படும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் மாநாடு டெல்லியில் மூத்த தலைவர் கபில் சிபில் இல்லத்தில் நடைபெறுகிறது.

முன்னதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு கபில் சிபல் அளித்த பேட்டியில், “காந்தி குடும்பம் தாமாக முன் வந்து தலைமை பொறுப்பிலிருந்து விலக வேண்டும். ஏனென்றால் அவர்களால் நியமிக்கப்பட்ட ஒரு அமைப்பு(செயற் குழு) அவர்களைப் பதவி விலக வேண்டும் என்று சொல்லாது.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இல்லாத போதும் அனைத்து முடிவுகளையும் அவர்தான் எடுக்கிறார். அவர் மறைமுகத் தலைவராக இருக்கிறார். காங்கிரஸ் அனைவருக்குமான கட்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு குடும்பத்தின் கட்சியாக இருக்க வேண்டும் என ஒரு சிலர் நினைக்கின்றனர்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

கபில் சிபிலின் கருத்துக்கு மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

-பிரியா

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா? ...

4 நிமிட வாசிப்பு

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா?  ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கேள்வி

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

4 நிமிட வாசிப்பு

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

4 நிமிட வாசிப்பு

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

புதன் 16 மா 2022