மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 மா 2022

ஹிஜாப் தீர்ப்பு: தேர்வை புறக்கணித்த மாணவிகள்!

ஹிஜாப் தீர்ப்பு: தேர்வை புறக்கணித்த மாணவிகள்!

கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பை அறிவித்ததையடுத்து, யாதகிரி மாவட்டத்திலுள்ள கல்லூரியில் 35 மாணவிகள் தேர்வை புறக்கணித்து வெளியேறினர்.

ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் அத்தியாவசிய நடைமுறையின் கீழ் வராது என்றும், ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடை நியாயமான கட்டுப்பாடு என்பதால் அதை மாணவிகள் எதிர்க்க முடியாது. அதனால், ஹிஜாப் தடை தொடரும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா கெம்பாவியில் அரசு பியூ கல்லூரி உள்ளது. இங்கு இன்று மாணவர்களுக்கு தேர்வு நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் 10.30 மணியளவில் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வெளியானதையடுத்து, 35 மாணவிகள் தேர்வை புறக்கணித்து விட்டு வகுப்பறையில் இருந்து வெளியேறினர்.

இதுகுறித்து தேர்வை புறக்கணித்த மாணவிகள் கூறுகையில்,”உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து பெற்றோருடன் ஆலோசனை செய்த பிறகு, ஹிஜாப் இல்லாமல் வகுப்புக்கு செல்வது குறித்து முடிவெடுப்போம்” என்று கூறினர்.

மற்றொரு மாணவி, “ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவோம். ஹிஜாபை அகற்ற சொன்னால் தேர்வை எழுதமாட்டோம்” என்று கூறினார்.

இதுகுறித்து பியூ கல்லூரியின் முதல்வர் சாகுந்தலா கூறுகையில், “உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றுமாறு மாணவிகளிடம் எடுத்துக் கூறினோம். ஆனால், அவர்கள் அதை கேட்காமல் தேர்வை புறக்கணித்து வகுப்பறையை விட்டு வெளியேறி விட்டனர். மொத்தமாக 35 மாணவிகள் தேர்வை எழுதாமல் சென்றுவிட்டனர்” என்று கூறினார்.

வகுப்புக்கு செல்லமாட்டோம்

உடுப்பி மாவட்டத்திலுள்ள அரசு பியூ கல்லூரியில் படிக்கும் மாணவிகள் கூறுகையில், “ஹிஜாப் இல்லாமல் வகுப்புக்கு செல்லமாட்டோம். ஏனெனில், ஹிஜாப் என்பது இஸ்லாம் மதத்தின் அத்தியாவசியமான நடைமுறையாகும். எங்களுடைய போராட்டம் தொடரும். உயர் நீதிமன்ற தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. எங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதுபோன்று உணர்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

-வினிதா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

செவ்வாய் 15 மா 2022