மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 மா 2022

மக்களவையில் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

மக்களவையில் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக எம்பிக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட, பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்த பாஜக, கோவா, மணிப்பூர்,உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான போட்டி மற்றும் கருத்து கணிப்புகளை தாண்டி ஆட்சியை கைப்பற்றியது. 2022 ஆம் ஆண்டின் வெற்றி 2024ஆம் ஆண்டிற்கான வெற்றியின் அறிகுறி என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தனது கட்சி தொண்டர்களிடம் பேசியிருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று(மார்ச் 12) காலை தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக இரு கைகளையும் கூப்பிய நிலையில் தனது பாரம்பரியமான இருக்கையில் வந்து அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, அங்கிருந்த பாஜக எம்பிக்கள் எழுந்திருந்து ”மோடி……மோடி……மோடி…” என்றும், “பாரத் மாதா கீ ஜே” என்றும் முழக்கமிட்டு மேஜையை தட்டி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். எம்பிக்களுடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் சேர்ந்து மேஜையை தட்டி வரவேற்பு அளித்தனர்.

ஆஸ்திரியாவில் இருந்து வந்த நாடாளுமன்றக் குழுவைச் சேர்ந்த எம்பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவின் இருக்கைக்கு அருகில் இருந்து அவையின் இன்றைய நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதை பற்றி மக்களவை சபாநாயகர் பேசிக் கொண்டிருந்த வேளையில் பிரதமர் மோடி மக்களவைக்குள் நுழைந்தார். அப்போதுதான் எம்பிக்கள் இவ்வாறு முழக்கமிட்டனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பை பார்த்து சிரித்தார். முழக்கங்கள் ஓய்ந்த பின்பு, இந்தியா வந்துள்ள ஆஸ்திரியக் குழுவை சபாநாயகர் வரவேற்றார்.

இந்த நிகழ்வின்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் சபையில் இருந்தனர்.

இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

-வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

திங்கள் 14 மா 2022