மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 மா 2022

தேர்தல் முடிவுகள்: மௌனம் கலைத்த திமுக

தேர்தல் முடிவுகள்: மௌனம் கலைத்த திமுக

மார்ச் 10ஆம் தேதி உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து, உபியில் பாஜக மீண்டும் ஆட்சியை வென்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் தனது ஆட்சியை இழந்த காங்கிரஸ் மற்ற மாநிலங்களிலும் தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் காங்கிரசின் கூட்டணி கட்சியான திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், இந்த தேர்தல் முடிவுகள் குறித்து எந்த கருத்தும் வெளியிடவில்லை.

தேர்தல் முடிவுகள் வெளிவந்து நான்கு நாட்கள் ஆன நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ இதழான முரசொலியில் 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து இன்று மார்ச் 14-ஆம் தேதி தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.

'ஐந்து மாநிலங்கள் 5 முடிவுகள்' என்று தலைப்பிடப்பட்ட அந்தத் தலையங்கத்தின் தொடக்கத்திலேயே, "5 மாநிலத் தேர்தல் முடிவுகள் வந்திருக்கிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கும் அதிர்ச்சி அடைவதற்கும் ஏதுமில்லை.

ஆட்சியில் இல்லாத மாநிலத்தை பாஜக கைப்பற்றி இருந்தால்தான் அதை அதிர்ச்சியாக பார்க்க வேண்டும். அதாவது பஞ்சாப் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்து இருந்தால் அது உன்னிப்பாக கவனிக்க தக்கது. மோடி அலை மீண்டும் எழுவதாகவும் சொல்லலாம். ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவை காணவில்லை"என்று குறிப்பிட்டிருக்கும் முரசொலி தொடர்ந்து,

"உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆட்சியைப் பறி கொடுத்து விடாமல் தக்க வைத்துக் கொண்டுள்ளது பாஜக. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள

இடங்கள் 403. இதில் பாஜக 256 இடங்களையும் கூட்டணியுடன் சேர்த்து 274 இடங்களையும் கைப்பற்றி இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 325 இடங்களை பெற்ற கட்சி அது. ஒப்பீட்டளவில் பார்த்தால் இது சரிதான்.

சாதனைக்காக வாக்களிப்பதாக இருந்தால் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமாகி இருக்க வேண்டும். வாக்கும் 2% தான் அதிகமாகியிருக்கிறது. ஆனால் சமாஜ்வாதி கட்சி கடந்த தேர்தலை விட 10 சதவிகித வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி சேர்ந்திருந்தால் பாஜக வீழ்ச்சியை கண்டிருக்கும்.

அனைத்துக்கும் மேலாக இந்த ஐந்து மாநில எல்லைகளைத் தாண்டி உணர்வதற்கு ஒரு கருத்து இருக்கிறது. அதுதான் ஒற்றுமை. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்துதான் அது.

தமிழகத்தில் எப்படி ஒரு கூட்டணியை நாங்கள் அமைத்து இருக்கிறோமோ அதே போன்ற கூட்டணியை அகில இந்திய அளவில் அமைக்க வேண்டும் என்பது ராகுல் காந்தியை மேடையில் வைத்துக் கொண்டு சேலத்தில் மு க ஸ்டாலின் சொன்னதாகும். இதைத்தான் 5 மாநில தேர்தல் முடிவுகளும் சொல்லியிருக்கிறது.

அணிச் சேர்க்கை என்பது இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தும் ஐந்தாவது முடிவு" என்று முரசொலியின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேந்தன்

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

திங்கள் 14 மா 2022