மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 மா 2022

கோவை மாணவர் இந்தியா திரும்ப விருப்பம்!

கோவை மாணவர் இந்தியா திரும்ப விருப்பம்!

உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை மாணவர் தற்போது நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது பெற்றோர் தகவல் அளித்துள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த போர் காரணமாக லட்சக்கணக்கில் மக்கள் வெளியேறி வருகின்றனர். அங்கு சிக்கியிருந்த இந்திய மாணவர்களை ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இந்திய அரசு மீட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், கோவை துடியலூர் அடுத்த சுப்பிரமணியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் சாய் நிகேஷ், உக்ரைனில் இருந்து திரும்பி வர மறுத்துவிட்டார். இதுகுறித்து அவரிடம் பெற்றோர் கேட்டபோது, பொதுமக்கள் ராணுவத்தில் இணையலாம் என்ற உக்ரைனின் அழைப்பை ஏற்று, அந்நாட்டு ராணுவத்தில் தான் இணைந்ததாகவும், இதன்மூலம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறி உள்ளதாகவும் சாய்நிகேஷ் தெரிவித்தார்.

இந்த தகவலை சாய்நிகேஷின் பெற்றோர் இந்திய வெளியுறவுத் துறைக்கு தெரிவித்தனர். இதையடுத்து, மத்திய, மாநில அரசுகளின் உளவுத் துறையினர் சாய்நிகேஷின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து சாய்நிகேஷூக்கு அவரது பெற்றோர் தாயகம் திரும்புமாறு கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது அவர்களின் கோரிக்கையை அவரது மகன் ஏற்று கொண்டுள்ளார்.

இதுகுறித்து சாய்நிகேஷின் தந்தை ரவிச்சந்திரன் கூறுகையில்,”சமீபத்தில் எங்கள் மகன் சாய்நிகேஷை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது, அவர் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். நாங்கள் இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு எங்கள் மகன் நாட்டிற்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார் என்பதை தெரிவித்தோம். அதற்கு, பொறுமை காக்குமாறும், சாய்நிகேஷ் நாடு திரும்ப நடவடிக்கை எடுப்பதாகவும் இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்று கூறினார்.

-வினிதா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

சனி 12 மா 2022