மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 மா 2022

மன்னிப்பு கேட்க தயார்: எஸ்.வி.சேகர்

மன்னிப்பு கேட்க தயார்: எஸ்.வி.சேகர்

பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக நடிகர் எஸ்.வி. சேகர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 2018ஆண்டில் தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பத்திரிகையாளர் சந்திப்பில், ஒரு பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

இதுதொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருத்தம் தெரிவித்தார்.

இந்த சர்ச்சைக்கு இடையில் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் பத்திரிகை துறையில் வேலை பார்க்கும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் முகநூலில் பதிவு ஒன்று செய்திருந்தார். அதுவும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி, எஸ்.வி.சேகருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் எஸ்.வி. சேகர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது எஸ்.வி. சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த பதிவை எஸ்.வி. சேகர் படிக்காமல் பகிர்ந்துள்ளதாகவும், இந்த செயலுக்கு அவர் மன்னிப்பு தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, செயலை செய்த பிறகு மன்னிப்பு கேட்டால் அது சிக்கலை சரிசெய்யுமா?. ஒரு செய்தியை ஒருவர் பகிரும்போது அந்த செய்தியை அவர் ஏற்றுக்கொள்கிறார் அல்லது ஆதரிக்கிறார் என்றுதான் கருதப்படுகிறது எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

மீண்டும் இந்த வழக்கு இன்று(மார்ச் 12) நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.வி.சேகர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே பெண் பத்திரிகையாளர் பற்றி சமூகவலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது நீக்கப்பட்டு மன்னிப்பும் கேட்கப்பட்டது. நீதிமன்றத்தில் மற்றொரு முறையும் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

காவல்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன், இது தொடர்பாக காவல்துறை சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்வதாக தெரிவித்ததையடுத்து வழக்கு விசாரணையை இரண்டு வார காலத்திற்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

-வினிதா

பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் 41% மாநிலங்களின் பங்கு: ப.சிதம்பரம் ...

3 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் 41% மாநிலங்களின் பங்கு: ப.சிதம்பரம்

முள்ளிவாய்க்கால்: பெசன்ட் நகர் கடற்கரை நினைவேந்தலுக்கு திமுக ...

12 நிமிட வாசிப்பு

முள்ளிவாய்க்கால்: பெசன்ட் நகர் கடற்கரை நினைவேந்தலுக்கு திமுக அரசு தடை!

72 மணி நேரம்தான் கெடு: அண்ணாமலை எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

72 மணி நேரம்தான் கெடு:  அண்ணாமலை எச்சரிக்கை!

சனி 12 மா 2022