மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 மா 2022

இது 2024 எம்.பி தேர்தலுக்கான முன்மாதிரி: மோடி

இது 2024 எம்.பி தேர்தலுக்கான முன்மாதிரி: மோடி

5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

ஐந்து மாநிலத்தில் சட்டப்பேரவையில் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இந்தச் சூழலில் நேற்று டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வந்தனர். அப்போது பிரதமர் மோடி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

“இன்று மகிழ்ச்சியான நாள். ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்திய அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. இந்த ஆண்டு மார்ச் 10 முதல் ஹோலி பண்டிகை தொடங்கும் என்று பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஏற்கனவே என்னிடம் உறுதி அளித்திருந்தனர். அவர்கள் தங்களது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளனர். குறிப்பாக பாஜக தொண்டர்கள் நாள் முழுவதும் உழைத்து மக்களின் மனங்களை வென்று வெற்றி பெற்றுள்ளனர்.

எல்லையை ஒட்டிய மாநிலம், கடலோர மாநிலம், கங்கையின் சிறப்புப் பெற்ற மாநிலம், வடகிழக்கு எல்லையில் உள்ள மாநிலம் என நான்கு திசைகளிலிருந்தும் பாஜகவுக்கு ஆசீர்வாதம் கிடைத்துள்ளது.

மணிப்பூர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியிலிருந்தாலும் அங்கு வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. கருத்துக்கணிப்புகள் தவறானவை என்று கோவா தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன.

2019ஆம் ஆண்டு மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பதற்கு 2017 உத்தரப்பிரதேச தேர்தல் வெற்றியே காரணமென நிபுணர்கள் கூறினர். அதுபோன்று இந்தத் தேர்தல் வெற்றி 2024 தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் எனக் கூறுவார்கள் என்று நம்புகிறேன்.

பஞ்சாபில் இந்த முறை தோல்வியடைந்தாலும் பாஜக தொண்டர்கள் எதிர்காலத்தில் பஞ்சாபில் நமது பலத்தை வளர்ப்பார்கள் என்றும் நம்புகிறேன்.

உத்தரப்பிரதேச தேர்தலில் சாதி பிரதானமாக இருக்கிறது என்று சிலர் அவதூறு செய்தனர். அவ்வாறு கூறுபவர்கள் 2014, 2017, 2019, 2022ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அம்மாநில மக்கள் சாதியை ஓரம்கட்டி வளர்ச்சிக்கான அரசியலைத் தேர்ந்தெடுத்துள்ளனர்” என்றார்.

ரஷ்யா போர் குறித்துப் பேசிய அவர், “ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் போரில் இந்தியா அமைதியின் பக்கம் இருக்கிறது. அனைத்துப் பிரச்சினைகளும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்படும் என்று நம்புகிறது” என்றும் தெரிவித்தார்

-பிரியா

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா? ...

4 நிமிட வாசிப்பு

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா?  ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கேள்வி

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

4 நிமிட வாசிப்பு

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

4 நிமிட வாசிப்பு

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

வெள்ளி 11 மா 2022