மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 மா 2022

போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் பஞ்சாப் தலைவர்கள் தோல்வி!

போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் பஞ்சாப் தலைவர்கள் தோல்வி!

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியான காங்கிரசைத் தோற்கடித்து ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் 89 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

18 இடங்களில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி ஒரு இடத்திலும், பாரதிய ஜனதா கட்சி 2 இடத்திலும், சுயேட்சைகள் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. சிரோமணி அகாலி தள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் துரை தொகுதியில் போட்டியிட்டு 58,000 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அதே சமயத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் போட்டியிட்ட அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் 32807 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் ஜீவன் கவுர் 39520 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

அதுபோன்று தற்போது முதல்வராக இருக்கும் சரண்ஜித் சிங் சன்னி, சம்கௌர் சாஹிப் மற்றும் பதவுர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே தோல்வி அடைந்தார். பதவுர் தொகுதியில் சன்னி 26294 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் லப் சிங் 63514 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மற்றொரு தொகுதியான சம்கௌர் சாஹிப் தொகுதியில் சன்னி 62148 வாக்குகளையும், ஆம் ஆத்மி வேட்பாளர் சரண்ஜித் சிங் 69981 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

-பிரியா

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

வியாழன் 10 மா 2022