மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 மா 2022

உபி: மீண்டும் முதல்வராகும் யோகி

உபி: மீண்டும் முதல்வராகும் யோகி

உத்திரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று வருகிறது. முதல்வரான யோகி ஆதித்யநாத் மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் 12.30 மணி நிலவரப்படி பாரதிய ஜனதா கட்சி 267 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு உரிய 202 இடங்களை தாண்டி அதிக அளவு பாஜக வெற்றி பெற்றுக் கொண்டு வருவதால் மீண்டும் யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைப்பது உறுதி ஆகிறது.

அதேநேரம் எதிர்க்கட்சி இந்த முறை வலிமையாக இருக்கும் என்ற வகையில் சமாஜ்வாதி கட்சி 122 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், தான் போட்டியிடும் கோரக்பூர் அர்பன் தொகுதியில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

கடந்த 2017ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் பாஜக தேர்தலை சந்தித்தது. அப்போது பெற்ற வெற்றியையடுத்து கோரக்பூர் எம்பியாக இருந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் இந்த முறை முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற முழக்கத்தோடு தேர்தலை சந்தித்து பாஜக வெற்றி பெற்றுள்ளது.

எனவே இந்த வெற்றியை யோகி ஆதித்யநாத் வெற்றியாகவே கருத வேண்டியுள்ளது என்கிறார்கள் பாஜகவினர்.

வேந்தன்

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

வியாழன் 10 மா 2022