மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 மா 2022

நான்கு ஏடிஜிபிக்கள் டிஜிபியாக பதவி உயர்வு!

நான்கு ஏடிஜிபிக்கள் டிஜிபியாக பதவி உயர்வு!

தமிழக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் ஏஎஸ்பியாக பதவியில் சேர்ந்து எஸ்பி, டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி என ஐந்து கட்ட பதவி உயர்வை பெறுகிறார்கள். அதில் உயர்ந்த பதவி மற்றும் இறுதியான பதவி டிஜிபி ஆகும்.

இந்த நிலையில், ஏடிஜிபிக்களாக உள்ள நான்கு ஐபிஎஸ் அதிகாரிகள், டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதுகுறித்து இன்று(மார்ச் 10) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு ஏடிஜிபியாக பதவி வகித்து வரும் அம்ரேஷ் புஜாரி, அதே சைபர் குற்றப்பிரிவில் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தாம்பரம் காவல் ஆணையரகத்தின் ஆணையராக உள்ள ஏடிஜிபி எம்.ரவி, டிஜிபியாக பதவி உயர்வு பெற்று தாம்பரம் காவல் ஆணையராக தொடர்கிறார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக பொறுப்பு வகித்து வரும் கே.ஜெயந்த் முரளி தற்போது, அதே சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புதிதாக உருவாக்கப்பட்ட பதவியில் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்..

புதுடெல்லி காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநரகத்தில் ஏடிஜிபியாக பணியாற்றி வரும் கருணாசாகர், தற்போது டிஜிபியாக பதவி உயர்வு பெற்று அதே பணியில் தொடர்கிறார்.

தற்போது டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற நான்கு பேரும், 1991 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவர்.

-வினிதா

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

வியாழன் 10 மா 2022