மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 மா 2022

பஞ்சாபில் ஆம் ஆத்மி முன்னிலை!

பஞ்சாபில் ஆம் ஆத்மி முன்னிலை!

பஞ்சாபில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸைக் காட்டிலும், ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது.

பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பஞ்சாபில் அதிக இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாபில் ஆம் ஆத்மிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. அதன்படி ஆம் ஆத்மி 80க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

ஆம் ஆத்மி - 82, காங்கிரஸ் - 15, பாஜக கூட்டணி - 5, சிரோமணி கூட்டணி - 11 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ஆளும் காங்கிரஸ் 2ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையை எட்டியதால், சங்ரூரில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மானின் இல்லத்தில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

அதுபோன்று தேர்தலில் வெற்றி பெற பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தனது குடும்பத்தினருடன் சம்கவுர் சாஹிப் குருத்வாரா கோவிலில் இன்று பிரார்த்தனை செய்தார்.

-பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வியாழன் 10 மா 2022