உபி உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பாஜக முன்னிலை!

politics

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நான்கு மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்துக் கொண்டுள்ளது.

இன்று காலை 9.30 மணி நிலவரப்படி உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 207 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சமாஜ்வாதி 84 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 37 தொகுதிகளில் முன்னிலை வகித்து கொண்டுள்ளது. காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் இரு தொகுதிகளிலும் முன்னிலை வைத்துக் கொண்டுள்ளனர்.

மணிப்பூர் தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக 15 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களிலும் முன்னிலை வைத்துக் கொண்டுள்ளனர்.

கோவா மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக 17 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி 5 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளனர்.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *