மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 மா 2022

அரசின் உபரி நிலங்களை விற்க ஒப்புதல்!

அரசின் உபரி நிலங்களை விற்க ஒப்புதல்!

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உபரி நிலங்களைப் பணமாக்குவதற்காக என்.எல்.எம்.சி எனப்படும் தேசிய நில பணமாக்கல் கழகத்தை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் மத்திய அரசுக்குச் சொந்தமாகத் தேசிய நில பணமாக்கல் கழகம் செயல்படவுள்ளது. 5000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும், இந்தக் கழகத்திற்கு முதல்கட்டமாக ரூ.150 கோடி மத்திய அரசு செலுத்தியுள்ளது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற அரசு அமைப்புகளுக்குச் சொந்தமான உபரி நிலம் மற்றும் கட்டட சொத்துக்களைப் பணமாக்கும் பணியை இந்தக் கழகம் மேற்கொள்ளும்.

2021-22 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதற்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என மத்திய அமைச்சரவை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

பயன்படுத்தப்படாத மற்றும் குறைவான பயன்பாடு கொண்ட முக்கியமற்ற சொத்துக்களைப் பணமாக்குவதன் மூலம் அரசுக்குக் கணிசமான வருவாய் கிடைக்கும் என்றும் மத்திய நிதியமைச்சகத்தின் பொது நிறுவனங்கள் துறை இந்தக் கழகத்தை உருவாக்கி, அதன் நிர்வாகம் அமைச்சகமாகச் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

புதன் 9 மா 2022