மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 மா 2022

மார்ச் 18 தமிழக பட்ஜெட்!

மார்ச் 18 தமிழக பட்ஜெட்!

தமிழ்நாடு அரசின் 2022- 23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வரும் மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு இன்று மார்ச் 8 தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதைத் தெரிவித்தார்.

மேலும் அவர், "தமிழக வரவு செலவு திட்ட அறிக்கை கடந்த ஆண்டு போலவே காகிதமில்லா பட்ஜெட்டாக கணினி தொடுதிரை வாயிலாக வழங்கப்படும்.

வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு எனது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடும். அந்தக் கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதம், மானிய கோரிக்கை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவெடுத்து அதனடிப்படையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெறும்.

மார்ச் 18ஆம் தேதி பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். கடந்த சட்டமன்ற தொடரை போலவே இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலும் கேள்வி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். முழுமையான சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதுதான் இந்த அரசின் கொள்கை. தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு படிப்படியாக முழுமையான நேரலை செய்யப்படும்" என்று தெரிவித்தார் சபாநாயகர்.

வேந்தன்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

செவ்வாய் 8 மா 2022