மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 மா 2022

5 மாநில தேர்தல் : ஆட்சியமைப்பது யார்?

5 மாநில தேர்தல் : ஆட்சியமைப்பது யார்?

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்ததையொட்டி 5 மாநிலங்களில் ஆட்சி அமைப்பது யார் யார் என்று எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகின.

70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்துக்கும், 40 தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்துக்கும், 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்துக்கும், 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்துக்கும், 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கும் தேர்தல் நடந்து முடிந்தது.

உத்தரப் பிரதேசத்திற்கு 7 கட்டங்களாகவும், மணிப்பூரில் இரு கட்டமாகவும் மற்ற மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தைப் பொருத்தவரை 117 இடங்கள் உள்ள நிலையில் அங்குப் பெரும்பான்மை பெற 59 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

அதன்படி, பஞ்சாபில் 63 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்றும் 28 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் தேசிய மற்றும் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

உத்தரப் பிரதேசம்

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மையைப் பெற 202 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

இதில் ஆளும் கட்சியான பாஜக 242 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், காங்கிரஸ் 4 இடங்களிலும், பாஜகவுக்கு அடுத்ததாக அதிகபட்சமாக 143 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சி 11 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உத்தரகாண்ட்

70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும்பான்மை பெற 36 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் இங்கே காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுவதாகக் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பாஜக 35 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் வெற்றி பெறும். ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்திலும் மற்றவை இரண்டு இடங்களிலும் வெற்றி பெறும்.

கோவா

40 தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்தில் பெரும்பான்மையைப் பெற 21 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

இங்கும் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இங்குக் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் தலா 16 இடங்களில் வெற்றி பெறலாம். கோவாவில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் மூன்று இடங்களையும் மற்றவை ஐந்து இடங்களையும் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

மணிப்பூர்

60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் 31 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

இங்கு 30 இடங்களில் பாஜகவும் 13 இடங்களில் காங்கிரசும் மற்றவை 17 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

-பிரியா

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

செவ்வாய் 8 மா 2022