மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 மா 2022

உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருமா?

உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருமா?

எங்களது கோரிக்கை ஏற்கப்பட்டால் மட்டுமே போர் நிறுத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியிருந்த நிலையில் இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

உக்ரைன் நாட்டில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கி ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது. கெர்சன் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா, தலைநகர் கீவ்வை குறிவைத்துத் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதனால் உக்ரைன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதோடு மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் குவிந்து கிடக்கின்றனர். குறிப்பாக கார்கிவ், மரியுபோல், சுமி ஆகிய பகுதிகளில் உச்சக்கட்ட தாக்குதல் நடந்து வருகிறது. இந்த சூழலில் மனிதாபிமான அடிப்படையில் பொது மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நேற்று முன்தினம் ரஷ்யா உக்ரைன் இடையே போர் ஒப்பந்தம் போடப்பட்டது.

அதில், மரியுபோல், வோல்னோவாகா ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் வெளியேறுவதற்காகப் போர் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த போர் ஒப்பந்தத்தையும் மீறி உக்ரைன் நகரங்களை விட்டு வெளியேறுவதற்கான முக்கிய பாதைகளை ரஷ்யா முடக்கித் தாக்குதல் நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதோடு குடியிருப்பு பகுதிகளைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனில் உள்ள பல்வேறு பல்கலைக்கழக கட்டிடங்களும் குண்டுவீச்சில் தரைமட்டமாகி உள்ளன. ஒடேசா நகரைக் கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தி வருவதாக நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். உக்ரைனின் மத்திய வடக்கு தெற்கு நகரங்களில் இரவு நேரத்திலும் ரஷ்யப் படைகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற தொடர் தாக்குதலால் கடந்த 11 நாட்களில் உக்ரைனிலிருந்து 15 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று ஐநா தெரிவித்துள்ளது.ஆனால் உக்ரைன் ஆயுதங்களைக் கீழே போடும் வரையிலும், எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையிலும் தாக்குதல் தொடரும் என்று புதின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையே இன்று மூன்றாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் உடன்பாடு ஏற்பட்டுப் போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

திங்கள் 7 மா 2022