மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 மா 2022

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் தம்பி நீக்கம்!

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் தம்பி நீக்கம்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வத்தின் சொந்த தம்பியான ஓ.ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வி.கே.சசிகலாவை, நேற்று ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா சந்தித்து பேசியது குறித்து இன்றைய டிஜிட்டல் திண்ணையில் வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,

தேனி மாவட்ட ஆவின் தலைவராக உள்ள ஓ.ராஜா,

தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன்,

தேனி மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் வைகை கருப்புஜி,

கூடலூர் நகர புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் சேதுபதி,

ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வி.கே.சசிகலாவை சந்தித்ததற்காக நேற்று விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்ட நிலையில், இன்று ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தம்பியே அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது அக்கட்சியினரிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-வினிதா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

சனி 5 மா 2022