மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 மா 2022

நடந்தவை நடந்தவை-நடப்பவை நல்லவை: ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்

நடந்தவை நடந்தவை-நடப்பவை நல்லவை: ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கியதில்... கிட்டத்தட்ட பாதி இடங்களில் திமுகவே போட்டியிட்டு பதவிகளைப் பெற்று விட்டது.

இதையடுத்து இது கூட்டணி அறமா என்றும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுகவினரை ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து ஸ்டாலின் விடுத்த அறிக்கையில், "கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற திமுகவினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு என்னை வந்து சந்திக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

திமுக தலைவரின் இந்த அறிவிப்பை பெரிதும் பாராட்டிய திருமாவளவன் இன்று மார்ச் 5 அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "எங்களது கோரிக்கையை ஏற்று முதல்வர் வெளியிட்ட உத்தரவு அவரது உயர்ந்த தலைமைப் பண்பையும் அரசியல் முதிர்ச்சியையும் காட்டுகிறது. கூட்டணி நலன் எவ்வகையிலும் பாதிக்க கூடாது என்ற அடிப்படையில் முதல்வர் செயல்பட்டிருப்பது எங்களுக்கு நெகிழ்ச்சியைத் தருகிறது" என்றார்.

அப்போது செய்தியாளர்கள், "நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றியதை பற்றி பேசினீர்களா?" என்று கேட்டார்கள்.

"நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி முதலில் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டது. அதுபற்றி திமுக தலைவரிடமும் அமைச்சர் வேலு விடமும் பேசினோம். சுமுகமாக தீர்வு காண்போம். கலைஞர் சொல்வது போல நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். சாப்பிட்டு போங்க என்று சொன்னாலே விருந்து சாப்பிட்ட மாதிரி இருக்கிறது என்று கிராமத்தில் சொல்வார்களே?"என்று பதிலளித்தார் திருமாவளவன்.

வேந்தன்

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

சனி 5 மா 2022