மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 மா 2022

ஓபிஎஸ் மாவட்டத்தில் திமுகவுக்கு வாக்களித்த அதிமுகவினர்!

ஓபிஎஸ் மாவட்டத்தில் திமுகவுக்கு வாக்களித்த அதிமுகவினர்!

திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக வார்டு உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி, சின்னமனூர் நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இங்கு மொத்தமுள்ள 27 வார்டுகளில், 20ல் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக ஒரு வார்டிலும், அதிமுக 6 வார்டுகளிலும் வெற்றி பெற்றது.

மறைமுகத் தேர்தலுக்கு, திமுக சார்பில் நகராட்சித் தலைவர் பதவிக்கு 25ஆவது வார்டு உறுப்பினர் அய்யம்மாள் போட்டியிட்டார். திமுகவைச் சேர்ந்த 19ஆவது வார்டு உறுப்பினரான செண்பகம் அய்யம்மாளுக்கு எதிராக போட்டியிட்டார். இந்நிலையில் இன்று நடைபெற்ற தேர்தலில், அய்யம்மாள் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். செண்பகம், 11 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார்.

இந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக 6 அதிமுக வார்டு உறுப்பினர்கள் வாக்களித்தது தெரியவந்தது. அவர்கள் 6 பேரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பில், “தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி மன்ற தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும்,

ஜெகதீசன் -சின்னமனூர் நகர 10வது வார்டு கழகச் செயலாளர், நகர மன்ற வார்டு உறுப்பினர்

உமாராணி -சின்னமனூர் நகரமன்ற 13வது வார்டு உறுப்பினர்

கவிதா ராணி -சின்னமனூர் நகரமன்ற 14வது வார்டு உறுப்பினர்

பிச்சை கணபதி -சின்னமனூர் நகர மன்ற 18வது வார்டு உறுப்பினர்

செல்வி -சின்னமனூர் நகரமன்ற 22வது வார்டு உறுப்பினர்

தவசி -சின்னமனூர் நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளர், நகர்மன்ற 26வது வார்டு உறுப்பினர் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்படுகின்றனர்.

அதுபோன்று சின்னமனூர் நகர கழக செயலாளர் ராஜேந்திரன் திமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

வெள்ளி 4 மா 2022