மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 மா 2022

கவுன்சிலர்களை ஆயுதங்களால் தாக்கினர்: எஸ்.பி.வேலுமணி

கவுன்சிலர்களை ஆயுதங்களால் தாக்கினர்: எஸ்.பி.வேலுமணி

வெளியூர் ஆட்களை வைத்து அதிமுக கவுன்சிலர்களை திமுக தாக்குவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று காலை முதல் மேயர், துணை மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் திமுக கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சில இடங்களில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

அதுபோன்று, கோவை வெள்ளலூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 வார்டுகளில் அதிமுகவும், 6 வார்டுகளில் திமுகவும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெற இருந்த பேரூராட்சி தலைவருக்கான தேர்தலில் பங்கேற்பதற்காக அதிமுகவினர் வந்த காரை மறித்து திமுகவினர் தாக்கியதாகவும், அதுபோன்று திமுகவினரை அதிமுகவினர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், மறைமுகத் தேர்தலுக்கு கவுன்சிலர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வரவில்லை என அங்குத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது, அதோடு பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , இதுதொடர்பாக கோவை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்தார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவினர் மிகப்பெரிய வன்முறையை நடத்தியுள்ளனர். நடந்து முடிந்த தேர்தலின் போது வெளியாட்களை வைத்து வன்முறையைத் தூண்டினர். கத்தியால் தாக்கினர். கள்ள ஓட்டுப் போட்டு முறைகேடாக வெற்றி பெற்றுள்ளனர். வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து அதிமுகவின் வெற்றியை பறித்தார்கள்.

இவ்வளவு முறைகேடுகளையும் மீறி வெள்ளலூரில் 8 அதிமுகவினர் வெற்றி பெற்றனர். இந்த 8 கவுன்சிலர்களுடன் கமிஷனர், ஆட்சியரை சந்தித்தேன். இவர்கள் காலை தேர்தலுக்காக வந்துகொண்டிருக்கும் போது 3 கார்களில் வந்து கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர்.

அதிமுகவினர் அமைதியாக இருந்தனர். ஆனால், அதிகாரிகள் தேர்தலை ஒத்திவைத்துள்ளனர். எங்களை அடித்துவிட்டு அவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். இந்த பகுதியில் நியாயமாகத் தேர்தலை நடத்த வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தில் முறையிடுவோம்” என்று தெரிவித்தார்.

-பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வெள்ளி 4 மா 2022