மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 மா 2022

கோவை மேயரின் முதல் கையெழுத்து!

கோவை மேயரின் முதல் கையெழுத்து!

சென்னை போன்று கோவையிலும் மாநகராட்சி மேயர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

100 வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சியில் 96 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது. இந்நிலையில் திமுக மேயர் வேட்பாளராக கல்பனா அறிவிக்கப்பட்டார். இன்று காலை விக்டோரியா ஹாலில் மேயர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. அப்போது கல்பனா மட்டுமே மனுத்தாக்கல் செய்த நிலையில், அவர் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மேயராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை கல்பனாவிடம் வழங்கினார். பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கல்பனாவுக்கு செங்கோல் வழங்கினர். செங்கோலை ஏந்தியபடி மேயர் இருக்கையில் அமர்ந்தார் கல்பனா. பின்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

இதையடுத்து கோவை மாநகராட்சியில் உள்ள கழிப்பிடம் இல்லாத, மாநகராட்சி பள்ளிக்குக் கழிப்பிடத்தைக் கட்டுவதற்கான உத்தரவில் தனது முதல் கையெழுத்தையிட்டார் கல்பனா.

-பிரியா

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

வெள்ளி 4 மா 2022