மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 மா 2022

ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதில்!

ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதில்!

உக்ரைனில் இந்திய மாணவர்கள் பிணை கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்யா கூறியதற்கு இந்திய வெளியுறவுத் துறை விளக்கமளித்துள்ளது.

உக்ரைனில் 8ஆவது நாளாக இன்று ரஷ்யா போர் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் தலைநகரான கீவ்-வை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா செயல்பட்டு வருகிறது. இன்று காலை கீவ்-வில் நான்கு வெடிகுண்டுகள் வெடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் சைரன்களும் அந்த பகுதியில் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. அதுபோன்று உக்ரைனின் முக்கிய நகரமான கேர்சன் நகரை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலால் இதுவரை அந்நாட்டு மக்களில் 10 லட்சம் பேர் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் இந்திய மாணவர்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்ற ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.

“உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் அங்கிருக்கும் இந்தியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. உக்ரைன் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பல மாணவர்கள் நேற்று கார்கிவ் நகரை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்திய மாணவர்கள் யாரும் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டதற்கான எந்த அறிக்கையும் எங்களுக்கு வரவில்லை" என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

“கார்கிவ் மற்றும் அண்டை பகுதிகளிலிருந்து இந்திய மாணவர்களை உக்ரைனின் மேற்கு பகுதிக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்களை இயக்க கோரியுள்ளோம். ரஷ்யா, ருமேனியா, போலாந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் மால்டோவா உள்ளிட்ட நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்

கடந்த சில நாட்களாக உக்ரைனிலிருந்து ஏராளமான இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதை சாத்தியமாக்கிய உக்ரைன் அதிகாரிகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதுபோன்று இந்தியர்களை தங்கள் எல்லைக்குள் அழைத்துத் தங்க இடம் அளித்ததற்காக உக்ரைனின் அண்டை நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அரிந்தம் பாக்சி.

-பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வியாழன் 3 மா 2022