மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 மா 2022

முதல்வருக்குப் பிரதமர் வாழ்த்து!

முதல்வருக்குப் பிரதமர் வாழ்த்து!

முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் நலத்திட்ட உதவிகளைச் செய்து கொண்டாடி வருகின்றனர். பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரைக்குச் சென்று முதல்வர் ஸ்டாலின், அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பிறந்தநாள் கொண்டாடும் அவருக்குத் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநில தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினைத் தொடர்புகொண்ட பிரதமர் மோடி, தமிழகத்தின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின், தங்களின் ஒத்துழைப்போடு தொடர்ந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.

-பிரியா

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

செவ்வாய் 1 மா 2022