மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 பிப் 2022

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம்: ஐ.நாவில் புறக்கணித்த இந்தியா

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம்: ஐ.நாவில் புறக்கணித்த இந்தியா

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைக் கண்டிக்கும் ஐநா தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருக்கிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய நேரப்படி இன்று பிப்ரவரி 26 அதிகாலை அமெரிக்கா மற்றும் அல்பேனியா ஆகிய நாடுகளால், "உக்ரைன் மீது படையெடுப்பு நடத்தி ஆக்கிரமிப்புப் போர் செய்து வரும் ரஷ்யாவை சர்வதேச நாடுகள் கண்டிக்க வேண்டும்"என்ற வரைவுத் தீர்மானம் முன்மொழியப்பட்டது.

ரஷ்யப் படைகள் உடனடியாக உக்ரைனில் இருந்து திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் அந்த தீர்மானம் வலியுறுத்தியது.

இந்தியா தங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன் என உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்த நிலையில்... இந்தத் தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது.

அமெரிக்கா மற்றும் அல்பேனியாவின் ஆதரவுடன் போலந்து, இத்தாலி, ஜெர்மனி, எஸ்டோனியா, லக்சம்பர்க் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக அதாவது ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்தன.

இந்தத் தீர்மானத்தில் இந்தியா, சீனா உட்பட மூன்று நாடுகள் வாக்களிக்கவில்லை.

தீர்மானம் நிறைவேறிய போதும் ரஷ்யா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் நாடு என்பதால் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக தனது வீட்டோ பவரை பயன்படுத்துகிறது ரஷ்யா.

இந்த தீர்மானத்தை ஏன் இந்தியா புறக்கணித்தது என்பது குறித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.

"தற்போதைய சூழ்நிலையில் ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளும் இராஜதந்திர ரீதியில் பிரச்சனையை தீர்த்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிக்க வேண்டும்.

உக்ரைனில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்களால் இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளது. வன்முறை மற்றும் பகைமைகளை உடனடியாக நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். மனித உயிர்களைப் பலி கொடுத்து எந்தத் தீர்வையும் எட்ட முடியாது.

ராஜதந்திரப் பாதை கைவிடப்பட்டது வருத்தமளிக்கிறது. நாம் அதற்குத் திரும்ப வேண்டும். இந்த எல்லா காரணங்களுக்காகவும், இந்தத் தீர்மானத்தை இந்தியா புறக்கணிக்க முடிவெடுத்தது" என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியா அனைத்து தரப்பினருடனும் தொடர்பில் உள்ளது, பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்துகிறது என்றும் திருமூர்த்தி கூறினார்.

-வேந்தன்

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

சனி 26 பிப் 2022