மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 பிப் 2022

தமிழக மாணவர்களிடம் பேசிய முதல்வர்!

தமிழக மாணவர்களிடம் பேசிய முதல்வர்!

உக்ரைனில் மூன்றாவது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், அங்குள்ள தமிழக மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

போர் நடைபெற்று வரும் உக்ரைனில் தமிழகத்தைச் சேர்ந்த 5000 மாணவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்டு தாயகம் கொண்டு வருவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக மாவட்ட, மாநில மற்றும் டெல்லி தொடர்பு அலுவலர்கள் நியமனம் செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(பிப்ரவரி 26) நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களிடம் பேசிய முதல்வர், உணவு உள்ளிட்டவை கிடைக்கிறதா? நிலைமை எப்படி இருக்கிறது? என்று விசாரித்தார். பயப்படாமல் தைரியமாக, பாதுகாப்பாக இருங்கள். உங்கள் அனைவரையும் தாயகம் அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று ஆறுதல் கூறினார்.

இதுவரை 1,250 பேர் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது.

-வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

சனி 26 பிப் 2022