மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 பிப் 2022

பேச்சுவார்த்தைக்குத் தயார் -ரஷ்யா?: போர் முடிவுக்கு வருமா?

பேச்சுவார்த்தைக்குத் தயார் -ரஷ்யா?: போர் முடிவுக்கு வருமா?

உக்ரைன் ராணுவம் சண்டையை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில் போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த இரு நாட்களாக உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவின் வடமேற்கே இருக்கும் குடியிருப்புப் பகுதியை ஏவுகணை தாக்கும் காட்சியும் இன்று வெளியானது. மின்ஸ்க் மாசிஃப் மற்றும் ஒபோலானில் துப்பாக்கிச் சூடுகள் கேட்கப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்திய நேரப்படி இன்று மாலை 5.06 மணிக்குத் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று காலை 10:30 மணியளவில் செர்னிஹிவ், ஹோஸ்டோமெல், மெலிடோபோல் நுழைவாயில்களில் கடும் சண்டை நடந்தது. இதில் மக்கள் இறந்தனர். உக்ரைன் தனது மக்களுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வரும் நிலையில், ரூமேனியா, ஹங்கேரி வழியாக இந்திய குடிமக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாக அங்குள்ள இந்தியத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ரூமேனியா, ஹங்கேரி எல்லை சோதனைச் சாவடிகளுக்கு அருகே வசிக்கும் இந்திய மாணவர்கள் வெளியுறவு அமைச்சகத்தின் குழுக்களுடன் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்தச்சூழலில் உக்ரைனில் ரஷ்ய ராணுவ நடவடிக்கை குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சர்வதேச அமைப்பு முக்கிய தீர்மானத்தை எடுக்கும்போது இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ரஷ்யா இன்று தெரிவித்துள்ளது.

அதுபோன்று, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்க்யெ லாவ்ரோவ், ’உக்ரைன் வீரர்கள் சண்டையை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார்’ என்று கூறியுள்ளார். உக்ரைனுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தி வரும் நிலையில், ரஷ்யாவின் இந்த பதில், போரை முடிவுக்கு கொண்டுவருமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

-பிரியா

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா? ...

4 நிமிட வாசிப்பு

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா?  ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கேள்வி

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

4 நிமிட வாசிப்பு

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

4 நிமிட வாசிப்பு

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

வெள்ளி 25 பிப் 2022