மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 பிப் 2022

உக்ரைன்–ரஷ்ய போர்: மத்திய அரசுக்கு மாநிலங்கள் கோரிக்கை!

உக்ரைன்–ரஷ்ய போர்: மத்திய அரசுக்கு மாநிலங்கள் கோரிக்கை!

உக்ரைன் ரஷ்ய எல்லையில் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிற நிலையில், தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்கள், உக்ரைனில் உள்ள தங்கள் மாணவர்களை இந்தியாவுக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின்படி இன்று காலை ரஷ்ய படைகள் உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து, பல்வேறு இடங்களில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் மக்கள் அச்சத்தில் உள்ளனர். போர் காரணமாக உக்ரைன் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், இந்தியாவைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் சொந்த நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களை மீட்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உக்ரைன் போருக்கு இடையே தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முறை படிப்புகளில் பயிலும் சுமார் 5,000 மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்துவருகின்றனர்.

அவர்களுடைய குடும்பத்தினரிடமிருந்து நூற்றுக்கணக்கான துயர அழைப்புகளை பெற்றுவருகிறேன். எனவே அவர்களை அவசரமாக உக்ரைனிலிருந்து இந்தியாவிற்கு அழைத்துவர கோரிக்கை வைக்கிறேன். குறிப்பாக இந்த விவகாரத்தை உயர்மட்ட அளவில் எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல "வந்தேபாரத்" மிஷன் போன்ற சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை மீட்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைனில் உள்ள மாணவர்கள் 044-28515288, 96000 23645, 99402 56444 ஆகிய எண்கள் மூலமும், இந்த இணையதளம் வழியாகவும் தமிழக மாணவர்கள் உதவி கோரலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ” உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களில், 2,320 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். எங்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதுபோன்று உக்ரைனில் இருந்து தாயகம் திரும்ப கர்நாடகாவைச் சேர்ந்த பத்து மாணவர்கள் காத்திருக்கின்றனர். அவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ஹரியானா முதல்வர் ஆகியோர், தங்கள் மாநில மாணவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், அரசின் நடவடிக்கைக்கு மாநிலங்கள் முழு ஆதரவு அளிக்கும் என்றும் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதிசெய்யும் வகையில் வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. உக்ரைனில் இருந்து மாணவர்கள் உட்பட சுமார் 18,000 இந்தியர்களை திரும்ப அழைத்து வர வெளியுறவு துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. உக்ரைனில் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், இந்தியர்களை வெளியேற்ற மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.அதனால் இங்கேயுள்ள குடும்பத்தினர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

-வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வியாழன் 24 பிப் 2022