மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 பிப் 2022

அரைநிர்வாணப் படுத்தப்பட்டாரா ஜெயக்குமார்?

அரைநிர்வாணப் படுத்தப்பட்டாரா ஜெயக்குமார்?

பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தினத்தன்று சென்னை ராயபுரத்தில் நடந்த பிரச்சனையில்... அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி கும்பல் வன்முறையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அன்று இரவு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பாக... ஜெயக்குமாரின் சட்டையையும் அதேபோல கழற்றி ஜெயக்குமாரை அரைநிர்வாண படுத்தியதாக அதிமுக சென்னை தொண்டர்களிடையே ஒரு கொதிப்பான தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து ஜெயக்குமாருக்கு நெருக்கமானவர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

"முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 21 இரவு தன் வீட்டில் கேஷுவலாக அமர்ந்திருந்தபோது போலீசார் உள்ளே நுழைந்தனர்.

அப்போது அவர், 'நான், 'எங்கேயும் ஓடிப்போகிற ஆளில்லை. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க டிரஸ் மாத்திட்டு வந்திடறேன்' என்று கூறினார்.

லுங்கியும் நீல நிற டி-ஷர்ட்டும் அணிந்து இருந்த ஜெயக்குமாரை தனது வழக்கமான வெள்ளை நிற அரசியல் உடைக்கு மாற அனுமதிக்காமல் அப்படியே கைது செய்து அழைத்துச் சென்றனர் போலீசார்.

நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் ஜெயக்குமாரை சில மணி நேரங்கள் வைத்திருந்தனர். பொதுவாகவே ஒருவரை சிறைக்கு அனுப்புவதற்காக மாஜிஸ்திரேட் முன் நேர் நிறுத்தும்போது அவரது அங்க அடையாளங்களை குறித்துக் கொள்வது வழக்கம்.

அந்த வகையில் குற்றஞ்சாட்டப்பட்ட சாதாரணமானவர்களை சட்டையைக் கழற்றச் சொல்லி போலீசார் அடையாளம் தேடுவார்கள். விஐபிகள் என்றால் அவர்களிடமே அங்க அடையாளங்களை கேட்டுக் கொள்வார்கள். இதுதான் நடைமுறை.

அன்று ஜெயக்குமாரை நீதிபதி முன் ஆஜர்படுத்த அழைத்துச் செல்வதற்கு முன்பு அவரது அங்க அடையாளங்களை குறிக்கும் வழக்கமான நடவடிக்கைக்காக சட்டையை கழற்றச் சொல்லி இருக்கலாம்.

ஆனால் இந்த அடிப்படையில் ஜெயக்குமாரை அரை நிர்வாணப்படுத்தி அதை புகைப்படம் எடுத்து சில காவல் துறையினர் தங்கள் விசுவாசத்தை காட்டும் விதமாக அதை மேலிடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டார்கள் என அதிமுக தொண்டர்கள் இடையிலேயே ஒரு தகவல் பரவி வருகிறது.

அதேநேரம் அன்று இரவு நீதிபதி முன் ஜெயகுமார் ஆஜர்படுத்தப்படும்போது... கைது செய்யப் படுகையில் அணிந்திருந்த நீல டீசர்ட்டில் இருந்து மாறி தனது அரசியல் உடையான வேட்டி சட்டையில் இருந்தார் ஜெயக்குமார்.

எனவே அவராகவே சட்டையை மாற்றி கொண்ட நிலையில் அரை நிர்வாணப் படுத்தினார்கள், அதை போட்டோ எடுத்தார்கள் என்று பரவும் தகவலை ஆராய வேண்டும்" என்கிறார்கள் ஜெயக்குமாருக்கு நெருக்கமானவர்கள்.

இதற்கிடையே தன் மீது போடப்பட்ட இரண்டாவது வழக்கில் ஜெயக்குமார் ஜாமீன் கேட்டு மனு செய்தார். இன்று அம்மனு விசாரணைக்கு வந்தபோது அதை நாளைக்கு ஒத்திவைத்திருக்கிறது நீதிமன்றம்.

வேந்தன்

திருவாரூர் வீதிக்கு கலைஞர் பெயர்: பாஜகவுக்கு பணிந்ததா திமுக? ...

8 நிமிட வாசிப்பு

திருவாரூர் வீதிக்கு கலைஞர் பெயர்: பாஜகவுக்கு பணிந்ததா திமுக?

குவாரி கொடூரம்: பின்னணி முகம்!

5 நிமிட வாசிப்பு

குவாரி கொடூரம்: பின்னணி முகம்!

சிறப்புக் கட்டுரை: இலங்கை: பெரும்பான்மைவாதம் என்ற தேசத்தின் ...

19 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: இலங்கை: பெரும்பான்மைவாதம் என்ற தேசத்தின் புதைகுழி!

வியாழன் 24 பிப் 2022