மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 பிப் 2022

போர் எதிரொலி: கிடுகிடுவென உயரும் தங்கம், கச்சா எண்ணெய்!

போர் எதிரொலி: கிடுகிடுவென உயரும் தங்கம், கச்சா எண்ணெய்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின், உக்ரைன் மீது போர் தொடுக்க இன்று காலை உத்தரவிட்டார். அதன்படி, ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்கில் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த போரினால், தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.864 அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 864 உயர்ந்து ரூ.38,616க்கும், கிராமுக்கு ரூ.108 உயர்ந்து ரூ.4,827க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதுபோன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 70.60-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 70,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதுபோன்று, கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு மிக அதிகமான விலையாகும். அதாவது கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கச்சா எண்ணெய் 96.51 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான் ரஷ்யா தாக்குதலினால் இந்திய பங்கு சந்தையில் கடும் சரிவை சந்தித்துள்ளது. இன்று காலை 9.54 மணியளவில் சென்செக்ஸ் 1,936 புள்ளிகள் சரிந்து 55,296 புள்ளிகளில் வணிகமாகிறது. அதேபோல் நிஃப்டி 572 புள்ளிகள் சரிந்து 16,491 புள்ளிகள் என்றளவில் வர்த்தகமாகிறது.

-வினிதா

திருவாரூர் வீதிக்கு கலைஞர் பெயர்: பாஜகவுக்கு பணிந்ததா திமுக? ...

8 நிமிட வாசிப்பு

திருவாரூர் வீதிக்கு கலைஞர் பெயர்: பாஜகவுக்கு பணிந்ததா திமுக?

குவாரி கொடூரம்: பின்னணி முகம்!

5 நிமிட வாசிப்பு

குவாரி கொடூரம்: பின்னணி முகம்!

சிறப்புக் கட்டுரை: இலங்கை: பெரும்பான்மைவாதம் என்ற தேசத்தின் ...

19 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: இலங்கை: பெரும்பான்மைவாதம் என்ற தேசத்தின் புதைகுழி!

வியாழன் 24 பிப் 2022