மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 பிப் 2022

அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தும் காலம் நீட்டிப்பு!

அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தும் காலம் நீட்டிப்பு!

சென்னை மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அலங்கார ஊர்திகள், மக்களின் பார்வைக்காக மேலும் ஒருவாரம் காட்சிப்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையிலும், தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் வகையிலும் அமைக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊர்திகள், டெல்லி குடியரசு தின அணிவகுப்பு விழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து, ஜனவரி 26ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் விடுதலை போரில் தமிழகம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட மூன்று அலங்கார ஊர்திகள் அணிவகுத்து சென்றன.

அதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கண்டு களிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 26ஆம் தேதி அன்று அந்த ஊர்திகளை சென்னை தீவுத்திடலில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

அனைத்து மாவட்டங்களின் முக்கிய நகரங்களுக்கு சென்ற அலங்கார ஊர்திகளை, அமைச்சர்களும் , மாவட்ட ஆட்சியர்களும் வரவேற்றனர். அலங்கார ஊர்திகளை மக்கள் மேளதாளம் முழங்க கரகாட்டம் உள்ளிட்ட கிராமிய நடனம் ஆடி பட்டாசு வெடித்து ஆர்வத்துடன் வரவேற்று, புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

இறுதியாக கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி அலங்கார ஊர்திகள் சென்னை மாநகருக்குள் வந்தது. இதை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு வரவேற்றனர். தொடர்ந்து மக்களின் பார்வைக்காக சென்னை மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டது. பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் அலங்கார ஊர்திகளை பார்வையிட்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

கடந்த 21ஆம் தேதி தமிழக முதல்வர் இந்த ஊர்திகளை பார்வையிட்டு அங்கு கூடியிருந்த மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

பிப்ரவரி 23ஆம் தேதிவரை மட்டுமே அலங்கார ஊர்திகள் காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ,தமிழக முதலமைச்சருக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று, அலங்கார ஊர்திகள் மேலும் ஒரு வார காலத்திற்கு மெரினாவில் காட்சிப்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

-வினிதா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

புதன் 23 பிப் 2022