மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 பிப் 2022

தேர்தலில் வெற்றி நிரந்தரம் இல்லை: விஜயகாந்த்

தேர்தலில் வெற்றி நிரந்தரம் இல்லை: விஜயகாந்த்

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, மநீம, நாதக, அமமுக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்ட நிலையில், திமுக கூட்டணி பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. இந்த தேர்தலில் தேமுதிக மாநகராட்சி வார்டுகளில் 6 வார்டிலும், நகராட்சி வார்டுகளில் 23 வார்டிலும், பேரூராட்சியில் 12 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், தேர்தலில் வெற்றி என்பது நிரந்தரம் இல்லை. நிச்சயமாக அனைத்திற்கும் ஒரு முடிவும், ஒரு தீர்வும், ஒரு மாற்றமும் கட்டாயம் உண்டு என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியின்றி, அதிகார பலம், ஆட்சி பலம், பண பலமின்றி, தைரியமாக தேர்தலில் களம் கண்ட தேமுதிக வேட்பாளர்களை பாராட்டுகிறேன்.

இந்த தேர்தலில், திமுகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் கூட்டணியின்றி, தனித்தனியாக போட்டியிட்டதால், வாக்குகள் அதிகளவில் பிரிவதற்கு காரணமாக அமைந்தது. மேலும் ஆளும் திமுக அரசு அதிகார பலத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் தேர்தல் விதி மீறல்களில் ஈடுபட்டது அனைவரும் அறிந்ததே. இந்த தேர்தல் முடிவுகள் அனைவரும் எதிர்பார்த்ததுதான்.

ஜனநாயக ரீதியில் நியாயமாக தேர்தல் நடைபெற்றிருந்தால் அனைவருக்கும் வெற்றி கிடைத்திருக்கும். தேர்தலில் வெற்றி என்பது நிரந்தரம் இல்லை. நிச்சயமாக அனைத்திற்கும் ஒரு முடிவும், ஒரு தீர்வும், ஒரு மாற்றமும் கட்டாயம் உண்டு. எனவே வெற்றி தோல்வியை சமமாக எடுத்துக் கொண்டு, நாம் அடுத்த கட்டத்திற்கு பயணிப்போம். தேர்தலில்

வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதுடன், தோல்வியுற்றவர்கள் எதற்கும் கலங்க வேண்டாம் துவண்டு விட வேண்டாம்.

நமக்கு என்று ஒர் எதிர்காலம் கட்டாயமாக இருக்கிறது என்ற நம்பிக்கையோடு நாம் பயணிப்போம். இந்த தேர்தலை பொறுத்தவரை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக ஏற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

புதன் 23 பிப் 2022